மேலும் அதிகரித்த எரிபொருள் விலை..
இன்றையதினம் (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை லங்கா ஐஓசி நிறுவனமும் தமது பெற்றோலின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.