தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்.
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு நேற்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியமைச்சராக பதவியேற்றுள்ள சுசில் பிரேமஜயந்தவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறைக்காலம் நிறைவடையும் போது, இது தொடர்பில் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.