Breaking News

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மாற்றம்!

 


இன்று (16) இரவு முதல் அமுலாக்கப்படவிருந்த ஊரடங்குச் சட்டத்தை திருத்தியமைத்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிகளுக்கு இணங்க ஊரடங்கு சட்டம் இன்று இரவு 11.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நாடளாவிய ரீதியில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.