Breaking News

O/L நுழைவுச் சீட்டு விநியோகம் இன்று முதல்!

 



க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கான நுழைவுச் சீட்டுபரீட்சைகள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விநியோகப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக நுழைவுச் சீட்டு விநியோகம் தாமதமாகியுள்ளதாக தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சைக்கான நுழைவுச் சீட்டு விநியோகத்தை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.