இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு டீசல் கப்பல்!
இந்திய கடன்திட்டத்தின் கீழ் இதுவரை 12 கப்பல்களில் 400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், எரிபொருளை இறக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.