Breaking News

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் அஞ்சலி – 12ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்!

 


காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (புதன்கிழமை) 12ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு  காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று இரவு அஞ்சலி செலுத்தினர்.

றம்புக்கணையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ​​பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.