19, 20 ஆம் திகதிகளின் மின்வெட்டு நிலவரம்...
நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) அறிவிக்கப்பட்டிருந்த மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.