இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதாரம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.
கொவிட்-19, கடன்கள் மற்றும் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், 2023 ஆம் ஆண்டில் 2.5% ஆக சிறிதளவு பொருளாதார வளர்ச்சி மேம்படும் என அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.