Breaking News

சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பிய காலிமுகத்திடல்!

 

 

 கொழும்பு – காலிமுகத்திடல் சிங்கக் கொடிகளுடனான மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆயிரம் தொழிற்சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

 இந்த வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, சில தொழிற்சங்கங்கள் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள கோட்டா கோ கம வளாகத்தை நோக்கி பேரணியாகச் செல்கின்றன. இதனால் காலிமுகத்திடல் படிப்படியாக மக்கள் கூட்டம் அதிகரித்து நிரம்பி வருகிறது.

 ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் தனித்துவம் வாய்ந்த கொடிகள் மற்றும் வண்ணங்களுக்கு பதிலாக சிங்கக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதிலும் அரசியல் கட்சியினரை போராட்டத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.