எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை நியமனம்?
எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
எதிர்வரும் சில நாட்களில் இந்த நெருக்கடிகளை தீர்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார்.