Breaking News

ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை கிடையாது – மைத்திரி!

 


மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ஷ அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களின் பிரதிபலனே ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது எனவும் அவர் கூறியுனார்.

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆட்சியில் உள்ள அரசாங்கம் சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்பாக சர்வதேசத்தின் மத்தியில் நல்ல நிலைப்பாடு இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டு, நாட்டு மக்கள் மகிழ்வுடன் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.