எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படமாட்டாது!
இன்று (22) நள்ளிரவு முதல் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 5,175 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.