Breaking News

பொருளாதார நெருக்கடி: ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை- ரனதுங்க!

 


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 5 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியாக இலங்கையில் நடத்தப்படுவது இந்த போட்டி ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை . மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. கிரிக்கெட்டுக்கு எதிராக அவர்களது மனநிலை இல்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலே இலங்கையில் இருந்து இந்த போட்டியை மாற்ற முடிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.