Breaking News

புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை ..

 


எதிர்வருகின்ற , தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இயன்றளவு மேலதிக பேரூந்துகளை  சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பஸ் பயணத்தின்போது கொவிட் சட்ட விதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.