Breaking News

நாசாவில் கடமையாற்றிய யாழ்.தமிழர் கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி மரணம்!

 


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலமாக கடமையாற்றிய யாழ்ப்பாணம் – குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானியான  கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி உயிரிழந்துள்ளார்.

இவர்  கடந்த  17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்பும் குழுவில் அங்கம் வகித்தவர் தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.