Breaking News

பேச்சுவார்த்தைக்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும்- ரஷியா விருப்பம்!

 


போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே பெலாரசில் இதுவரை நடைபெற்ற 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நாளை துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும் என ரஷியா விரும்புகிறது. சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியபின்னரே, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச முடியும் என்று ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகிறார். அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் பற்றிய தெளிவு கிடைத்தவுடன் சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தாமதம் இன்றி அமைதி திரும்புவதற்காக, உக்ரைனின் நடுநிலைமை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். ரஷிய அதிபருடன் நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் லாவ்ரோவின் கருத்து உள்ளது.