Breaking News

தடையற்ற மின்சாரத்தை வழங்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

 


தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மார்ச் 05ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுலாகாது என அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் நாளை (03) முதல் வழமை போன்று இடம்பெறும் எனவும் அச்சம் காரணமாக எரிபொருள் சேகரிப்பதை தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களின் அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலின் பிறகு, தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்வது, இருப்புகளைப் பராமரித்தல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை தொடர்ச்சியாக வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.