Breaking News

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் அணிதிரண்ட மக்கள்!

 



பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

‘முழு நாடும் அழிவில், நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிராக இந்த பேராட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பில் நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகை தந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.