இணையத்தை கலக்கும் ஜாலியோ ஜிம்கானா....
'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் சிங்கிளான அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 2வது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா...’ என்ற பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தை கலக்கி வருகிறது.