வழமைக்கு திரும்பும் எரிவாயு விநியோகம்!
எரிவாயு கப்பல்களுக்கான பணத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) முதல் எரிவாயு இறக்குதல் மற்றும் அதனை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்கள் டொலர்கள் பற்றாக்குறையால் எரிவாயு விநியோகத்தினை நிறுத்தியதாக நேற்று அறிவித்திருந்தன.
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.