பிற்போடப்பட்ட பரீட்சைகளை முன்னர் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நடத்த தீர்மானம்!
காகித தட்டுப்பாட்டின் காரணமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளுக்கான பரீட்சையை முன்னர் திட்டமிட்ட திகதியில் நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை வினாத்தாள்களை, அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி பணிப்பாளர், ஸ்ரீ லால் நொனிஸ் தெரிவித்துள்ளார்.
9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன் 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் மேல் மாகாண திணைக்களத்தில் அச்சிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.