Breaking News

சிவகார்த்திகேயனை பாராட்டிய விஜய்...

 


விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. 

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’  பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது. வித்யாசமான வரிகள் இடம்பெற்ற இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தியுள்ளார். இப்பாடலுக்கு திரைதுறையினர், ரசிகர்கள் என பலரும் நடனமாடி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் இப்பாடல் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இப்பாடலை கேட்டு விஜய் சார் உங்களிடம் என்ன சொன்னார் என்ற கேள்விக்கு, இந்த பாடலை முன்பே படமாக்கிவிட்டார்கள். அதனால் விஜய் சார் இந்த பாடல் குறித்து என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, சமீபத்தில் தான் இதன் புரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்று கூறினார். என தெரிவித்தார்.