இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்!
இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
டெல்டா மாறுபாட்டின் இருப்பு படிப்படியாக மறைந்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் இலங்கையில் ஒமிக்ரான் மாறுபாடு ஆதிக்கம் செலுத்துவதாக அறிவித்தது.
கொரோனா நோயாளர்களுக்கு தேவையான படுக்கைகள் இலங்கையின் மருத்துவமனைகளில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கூடுதலாக, கொரோனா நோயாளிகளுக்கு ICU படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாக கூறியது தவறானது என்றும் அதனை சுகாதார அமைச்சு நிராகரித்தது.