12, 13ம் திகதிகளில் ஐ.பி.எல். மெகா ஏலம்: 590 வீரர்கள் இடம் பிடிப்பு!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பி.சி.சி.ஐ.யால் நடத்தப்பட்டு வருகிறது. உலகளவில் இந்த டி20 கிரிக்கெட் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வீரர்கள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைவிட, ஐ.பி.எல். தொடரில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு வரை 8 அணிகள் விளையாடி வந்தன. தற்போது இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். புதிய அணிகளும் நான்கு வீரர்களை அதுபோன்று தக்க வைத்துக் கொள்ளலாம்.