Breaking News

பாவாடை தாவணியில் அசத்தும் சினேகா... வைரலாகும் புகைப்படங்கள்

 


நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். 


இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் இருக்கும் சினேகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.