க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அறிவிப்பு!
க.பொ.த உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) நிராகரித்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு போதிய ஆவணங்கள் எதுவும் நீதிமன்றில் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா இதன்போது தெரிவித்தார்.
இந்த விண்ணப்பம் தொடர்பாக நீதிமன்ற மறுஆய்வு செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், திட்டமிட்டபடி க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு வினிவிட பெரமுனவின் பொதுச் செயலாளர் நாகானந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்தார்.
உயர்தரப் பரீட்சையை மாணவர்கள் தயார்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் நடத்துவது மாணவர்களின் கல்வி உரிமையை மீறுவதாகும் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.