Breaking News

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அதிரடி அறிவிப்பு!

 


தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி குறித்த வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.