மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - திரிஷா!
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி போன்ற பல இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து பிரேம்குமார் இயக்கி வெற்றி பெற்ற திரைப்படம் 96. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படத்தின் இயக்குனர் பிரேம்குமாரை விஜய்சேதுபதி சந்தித்து 96 இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.