Breaking News

70 ஆண்டுகால ஆட்சி நிறைவை கொண்டாடும் பிரித்தானிய மகாராணிக்கு கொரோனா தொற்று உறுதி!

 


95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவதாகவும், ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் விண்ட்சரில் தனது கடமைகளைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரண்மனை அறிவித்துள்ளது.

சிம்மாசனத்தின் வாரிசான இளவரசர் சாள்ஸ் இரண்டாவது முறையாக கோவிட்க்கு நேர்மறை சோதனை செய்த வாரத்தில் இளவரசர் சார்ல்ஸுடன் ராணி நேரடி தொடர்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான ராணி, 70 ஆண்டுகள் அரியணையில் அமர்ந்து தனது வரலாற்று சிறப்புமிக்க பிளாட்டினம் விழாவை அடைந்த சில வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேவேளை மகாராணியார் மூன்று முறை தடுப்பூசியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.