டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!
டெங்கு வைரஸில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
தற்போது நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும் காலத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியரின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 9 ஆயிரத்து 609 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.