Breaking News

ஓடிடியில் வெளியாகிறதா பொன்னியின் செல்வன்?

 


ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பெரும் பொருட்செலவில் “திரையரங்க வெளியீட்டுக்காகவே தயாராகி வருகிறது. ஓடிடியில் நேரடி வெளியீடு குறித்த தகவல்கள் அனைத்துமே வதந்தி. இந்தப் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்றே நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.