Breaking News

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

 


புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

19 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.