தமிழ்க் காட்சிகளின் அம்பலமாகும் துரோகம்
தமிழ் மக்களை புதைகுழிக்குள் தள்ளிய சதிகார அரசியல் வாதிகள் கசிந்த ஆவணம்
தமிழ் மக்களின் இருப்பை இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வரும் 13ம் திருத்தச்சட்டத்தின் கீழ் இல்லாமல் ஆக்குவதற்கான கடிதம் ஒன்றில் தமிழ் அரசியல் வாதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
மிகக்குறிப்பாக இந்திய ஒன்றிய பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில். 13ம் திருத்தச்சட்டத்தை அமுல் படுத்தக்கோரியும் ஒற்றையாட்சிக்குள் தாம் சுயநிர்ணய உரிமையை அனுபவிப்பதாகவும். தமிழ் மக்களின் அடிப்படை அபிலா
சைகளை இந்திய அரசிடம் அடகு வைத்திருக்கின்றனர் இந்த அரசியல் வாதிகள்.
தமிழர்களுக்கு எதிரான இக்கடித வரைவை உருவாக்க மூளையாக செயற்பட்ட தேச துரோகிகள்
- சுமந்திரன் (தமிழரசுக்கட்சி)
- மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக் கூட்டணி)
- சுரேன் ராகவன் (இலங்கை பொதுசன முன்னணி)
- நிஷாம்
குறித்த தேச துரோக கடிதத்தில் கையப்பமிட்டவர்கள்
- சம்பந்தன்(த.தே.கூ)
- மாவை சேனாதிராச(தமிழரசுக்கட்சி)
- விக்கினேஸ்வரன்(தமிழ் மக்கள் கூட்டணி)
- அடைக்கலநாதன்(TELO)
- சித்தார்த்தன்(PLOT)
- சுரேஸ் பிரேமச்சந்திரன்(EPRLF)
- சிறிகாந்தா (தமிழ் தேசிய கட்சி)
ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்தின் இறுதியில் தாம் இந்தியாவிடம் 13ம் திருத்தச்சட்டத்திற்கான அழுத்தத்தை வழங்க கோருவதாகவும். ஒற்றைசிக்குள்ளான பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள்ளேயே தாம் தீர்வை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் மக்களை பிராந்திய சிறுபான்மையினர் என்கின்ற வகையிலான வாசகங்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் மக்களையும் அவர்கள் இதுவரை இழந்த பேரிழப்புக்களையும் ஒட்டுமொத்தமாக இந்தியாவிடம் அடகு வைத்து தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்திருக்கின்றனர் இந்த இந்திய கையாட்கள்.
இவர்களின் கோரிக்கைபோல புதிய அரசியலமைப்பு ஒன்று நிறைவேற்றப்பட்டால் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான ஒரு இறுதித்தீர்வாகவே சர்வதேசம் இதை எடுத்தக்கொள்ளும் அதன்பின் எமது குரலின் நீதி சாகடிக்கப்பட்டு நாம் ஏதிலிகளாக காலம்முழுதும் வாழ்ந்து சாகவேண்டிய பெரும் துயர நிலை எமக்கு ஏற்படும்.
தமிழ் அரசியல் வாதிகள் கையெழுத்திட்ட கடிதம் :-
முக்கிய குறிப்பு :-
சிங்கள இனவாத அரசின் கூலிகளாக ஒட்டுக்குழுக்கள் இயங்கிவருகின்றனர். இவர்கள் தமது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்காக சிங்கள அரசால் கொடுக்கப்படும் சலுகைகளை இன்றும் அனுபவித்து வருவதுடன் தொடர்ந்தும் தமிழீழ விடுதலையிற்கு எதிராக இயங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. EPDP, EPRLF, TELO, PLOT, ஆனந்த சங்கரி போன்ற பலர் இப்பட்டியலில் அடங்குவர்.
நன்றி-தாரகம்