கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை!
சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது.
கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்திருந்தது.
சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் கறுப்புப் பட்டியல் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீனத் தூதரகம் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.