Breaking News

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சின்னத்திரை நடிகை..


 சின்னத்திரையில் ஒளிப்பரப்பான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை தவிர, குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நீலிமா நடித்துள்ளார். 

நடிகை நீலிமா, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நீலிமா ராணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் நீலிமா ராணி பதிவு செய்திருக்கிறார்.