மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரிப்பு – தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்!
சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபாய் வரையிலும் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வழமையாக ஜனவரி மாதத்தில் ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும் என்றும் ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.