Breaking News

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு!

 


2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஐ பார்வையிடுவதன் மூலமும் உரிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமும் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம்.

பாடசாலை பரீட்சார்த்திகள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர்கள் அறிவுறுத்தியவாறு சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.