Breaking News

மீண்டும் இணையும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா?

 


சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு படத்திற்கு கிடைத்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இதில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணையபோவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டிரைவிங் லைசென்ஸ். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் மீண்டும் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை இணைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.