அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த மைத்திரிபால சிறிசேன!
நாடு எதிர்கொண்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கூட்டு அரசாங்கம் எனவும் பாராளுமன்றத்தில் மூன்றாவது பிரதான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீள முடியாத ஒரு நிலைக்குச் சென்றுவிட்டதாக சிலர் கருதினாலும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததுள்ளார்.
1977 ஆம் ஆண்டு தேர்தலிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 2022 ஆம் ஆண்டிலாவது மக்களின் குறைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன்னெடுத்தால் மாத்திரமே வரப்போகும் ஆபத்தை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
விவாசாயிகள் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்களை போன்று ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் கூட அனுபவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.