Breaking News

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் 

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மேலும் 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்த வந்த 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 90 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 18 பேர் நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 அயிரத்து 83 ஆக பதிவாகியுள்ளது.