Breaking News

10ஆம் திகதி முதல் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய பாடசாலைகள் திறப்பு!



நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய, முதலாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையில் கல்வி நடவடிக்கைகளை சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனவினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.