Breaking News

இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா?

 


மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று (22) நண்பகல் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் இருக்கும் எரிபொருள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக இருக்கும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எரிபொருளை வழங்கினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரையில் 10,000 மெற்றிக் தொன் டீசலை மின் உற்பத்திக்காக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.