நாளாந்தம் இரண்டரை மணி நேரம் மினசாரம் துண்டிப்பு!
நாட்டில் நாளாந்தம் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக மின்சார சபை அவதானம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போதைய நிலையில் தேவைக்கு அமைய எண்ணெய் கிடைக்காவிடத்து இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க நேரிடுமென கூறப்படுகிறது.
அதற்கமைய, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.