Breaking News

இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

 


இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.