Breaking News

எதிர்வரும் 10 நாட்களுக்குள் மின்தடை ஏற்படும் - ரமேஷ் பத்திரண!



எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற  ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைய மின்துண்டிப்பு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.