Breaking News

இன்று பிக்போஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்?

 


கடந்த வாரம் பிக்பாஸ் நிகழச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் நிகழச்சியில் இருந்து வெளியேறினார்.

இந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பிக்பாஸ் அறிவித்திருந்தது. இதனையடுத்து சிபி, சஞ்சீவ், தாமரை, நிரூப், அமீர் ஆகியோர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து ராஜு, அக்சரா, வருண், பாவனி, பிரியங்கா, அபினய் ஆகியோர் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றுள்ள வருண் மற்றும் அபினய் ஆகிய இருவரில் ஒருவர் வெளியறலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் அபினய் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.