சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனஈர்ப்பு போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அதேநேரம் வடகிழக்கில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.