உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கள் விலை அதிகரிப்பு!
உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி அதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 184 ரூபாவில் இருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவில் இருந்து 121 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும். 144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.