Breaking News

அமெரிக்கா செல்லவுள்ள சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு!

 


தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கில் சட்ட வல்லுனர்கள் குழுவொன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் எதுவும் முன்னெடுக்கப்படாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அதன் நோக்கம் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது சட்ட நிபுணர்கள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரும் வருகை தருவார்கள் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அமைச்சின் சட்ட நிபுணர்கள் குழுவுடனும் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச நகர்வுகள் மூலமாகவே எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற நிலையில் அதனை இலக்காக கொண்டு நகர்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.