Breaking News

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள் பதிவு!

 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (31) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,760 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 06 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 02 ஆண்களும் 04 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 09 ஆண்களும் 02 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.